கோதுமை மா விலை அதிகரிக்கப்படவில்லை

முற்றிலும் பொய்யான தகவலென  பிரிமா நிறுவனம் அறிவிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நேற்று இணையத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென பிரிமா நிறுவனம் தெரிவித்ததுடன், கோதுமையின் விலை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது.

எக்காரணம் கொண்டும் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென

 

பிரிமா குழுமத்தின் பொது முகாமையாளர்Tan Beng Chuan பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சாந்தனி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை 8.50 ரூபாவால் நேற்றுக்காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் காரணமாக நாட்டு மக்களிடையே பெரும் குழப்ப நிலையொன்று தோன்றியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் பிரிமா நிறுவனத்தின் ஊடகப் பிரிவிடம் வினவிய போது,

வெளியாகியுள்ள செய்து போலியானதாகும். நேற்றைய தினம் அரைநாள் வேலையென்பதால் 12 மணியுடன் நிறுவனத்தின் அனைத்து வேலைகளும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் விலை அதிகரிப்புத் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனவும் அந்நிறுவனத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவையின் உபக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரமே அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியும். எந்தவொரு நிறுவனத்திற்கும் தன்னிச்சையாக அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என்று பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சு நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலும் கோதுமை மா விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. போலியான செய்திகளே வெளியாகியுள்ளன. பான் உட்பட பேக்கிரி உணவு வகைகளின் விலைகள் எதுவும் அதிகரிக்கப்படாதென அகில இலங்கை போக்கிரி உரிமையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை