ஒருநாள், டி20 போல் டெஸ்ட் போட்டிகளுக்கும் விளம்பரம் தேவை

ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு தரப்படும் விளம்பரம் போன்றே டெஸ்ட் ஆட்டங்களுக்கும் தர வேண்டும் என இந்திய அணித் தலைவர் விராட் கோலி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற பிங்க் டெஸ்ட் வெற்றி தொடர்பாக அவர் கூறியதாவது:​

டெஸ்ட் ஆட்டம் என்பது நமது மனவலிமைக்கு சவால் விடுவதாகும். சூழ்நிலையை அனுசரித்து நாம் எழுந்து நிற்க வேண்டும்.

சௌரவ் கங்குலி தலைமையிலான அணியில் இருந்து நமது டெஸ்ட் வெற்றிப் பயணம் தொடங்கியது. நம்பிக்கையை நமது பலமாகும். நேர்யைமை கூறவேண்டும் என்றால் நாம் சிறப்பாக பாடுபட்டதால் அதன் பலனை அடைகிறோம்.

கொல்கத்தா டெஸ்ட் ஆட்டத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள், டி20 போன்றே டெஸ்ட் ஆட்டங்களுக்கும் அதிக விளம்பரம் தேவை. டெஸ்ட் ஆட்டங்களுக்கு என பிரத்யேக நிரந்தர மைதானங்களை ஏற்படுத்த வேண்டும்.

 

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை