இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா தொடர்ந்தும் பங்களிப்பு செய்யும்

இந்தியாவிற்கு இலங்கை மிக முக்கியமான நாடு என்றும் இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா தொடர்ந்தும் பங்களிப்புச் செய்து வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். இந்திய பிரதமர் ஒருவர் வடக்கிற்கு விஜயம் செய்த முதல் நிகழ்வாக பிரதமர் மோடியின் யாழ். விஜயத்தை கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா வைபவம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர்,   இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவு தொடர்ந்த வண்ணம் உள்ளது. வடக்கிற்கும் தெற்கிற்குமான ரயில் பாதை நிர்மாணிப்பு, பல்கலைக்கழக கட்டிடங்கள், வீடுகளை நிர்மாணித்தல்,குடிநீர் திட்டங்கள், கல்வித் துறை சார்ந்த திட்டங்கள் என பல்வேறு திட்டங்களில் இந்திய அரசாங்கம் பங்களிப்பு செய்து வருகிறது. தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்தியில் ஒத்துழைப்புக்களை வழங்கும். 

லோரன்ஸ் செல்வநாயகம்  

 

 

Sat, 10/19/2019 - 09:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை