1st T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி

RSM
1st T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி-1st T20-SLvAUS-AUS Won by 134 Runs

100 ஓட்டங்களை தாண்ட முடியாது தோல்வியை தழுவியது இலங்கை

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ரி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடிலைட்டில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது.

1st T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி-1st T20-SLvAUS-AUS Won by 134 Runs

இன்று (27) தனது பிறந்தநாளை கொண்டாடும் டேவிட் வோனர், இறுதி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காது 56 பந்துகளில் 100 ஓட்டத்தை கடந்து தனது கன்னி ரி20 சர்வதேச சதத்தை பூர்த்தி செய்து அவுஸ்திரேலிய அணியை இமாலய இலக்கிற்கு கொண்டு சென்றார்.

அதிரடியாக ஆடிய, ஆரோன் பிஞ்ச் 36 பந்துகளில் 64 ஓட்டங்களையும், க்ளன் மெக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில், லக்‌ஷான் சந்தகன், தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஆரம்பம் முதல் தடுமாறி வந்த இலங்கை அணி வீரர்கள் எவரும் 20 ஓட்டங்களை தாண்ட முடியாமல் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி சார்பில் ஆகக் கூடுதலா தசுன் ஷானக 18 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்றார். விக்கெட் காப்பாளர் குசல் பெரேரா 16 ஓட்டங்களையும், ஓஷத பெனாண்டோ 13 ஓட்டங்களையும் அணியின் தலைவர் லசித் மாலிங்க ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

1st T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி-1st T20-SLvAUS-AUS Won by 134 Runs

அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதோடு, அடம் ஷம்பா 3 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் மற்றும் மிச்சல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும் அஸ்டன் அகார் ஒரு விக்கெட்டையும் கைப்பறினர்.

அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், அவுஸ்திரேலிய அணி வீரர் தனியே பெற்ற 100 ஓட்டங்களை தாண்ட முடியாமல், இலங்கை அணி 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 134 ஒட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய டேவிட் வோனர், ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

1st T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி-1st T20-SLvAUS-AUS Won by 134 Runs

அந்த வகையில் 3 போட்டிகளைக் கொண்ட இத் தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

இத்தொடரின் 2ஆவது போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி பிரிஸ்பனிலும், 3ஆவது போட்டி நவம்பர் 01 ஆம் திகதி மெல்பேர்னிலும் இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியா 233/2 (20.0)
டேவிட் வோனர் 100 (56)
ஆரோன் பிஞ்ச் 64 (36)
க்ளன் மெக்ஸ்வெல் 62 (28)

தசுன் ஷானக 1/10 (1.0)
லக்ஷான் சந்தகன் 1/41 (4.0)
நுவன் பிரதீப் 0/28 (4.0)
லசித் மாலிங்க 0/37 (4.0)

இலங்கை 99/9 (20.0)
தசுன் ஷானக 17 (18)
குசல் பெரேரா 16 (16)
லசித் மாலிங்க 13 (19)
ஓஷத பெனாண்டோ 13 (21)

அடம் ஷம்பா 3/14 (4.0)
மிச்சல் ஸ்டார்க் 2/18 (4.0)
பெட் கம்மின்ஸ் 2/27 (4.0)
அஸ்டன் அகார் 1/13 (4.0)

ஆட்ட நாயகன்: டேவிட் வோனர்

Sun, 10/27/2019 - 12:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை