அஹங்கமையில் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் கண்டனம்

மாத்தறை அஹங்கமயில் திறன் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீன் விஜயம் செய்வதற்கு எதிராகநேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.முஸ்லிம் விரோதக் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்ற இவர்கள்,காத்தான்குடி,கல்முனையில் நடந்து கொள்வதைப் போன்று இங்கு எவர்களும் நடந்து கொள்ளக் கூடாதென்றும் கூக்குரலிட்டனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு வருகை தருவதற்கு இரு மணித்தியாலயங்களுக்கு முன்னரே ஆர்ப்பாட்டக்கார்கள் இங்கு திரண்டதாக அறிய வருகிறது.நிலையில் அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரத்துச் செய்த தோடு

குறித்த ஹோட்டல் பாடசாலை இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, பிரதியமைச்சர் கருணாதிலக்க பரணவித்தாரண உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்டது.

இதே வேளை, மாத்தறை, அஹங்கமையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது மற்றுமொரு குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெகுவாக கண்டிப்பதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம் சமூகத்தின் குரலை எப்படியாவது அடக்கி விட வேண்டும் என்று முயற்சித்து வரும் கடும் போக்காளர்கள், இன்று மீண்டும் ஒரு இனவாத நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இதன் மூலம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான உச்சக்கட்ட காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளதோடு அவரை எப்படியாவது பழிவாங்க துடிப்பதையும் நிரூபித்துள்ளனர்.

அமைச்சர் ஒருவர், தமது அமைச்சின் மூலம் இடம்பெற்ற அபிவிருத்தி திட்ட நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை போடும் இந்த காட்டு மிராண்டியாளர்களை நினைத்து வெட்கப்படவேண்டியுள்ளது.

ஜனநாயக சூழலை கேலிக்கூத்தாக்கி, சட்டம் மற்றும் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொள்ளும் இனவாத மத குருமார்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்தாத வரை இன ஐக்கியத்தை ஒரு போதும் ஏற்படுத்த முடியாது எனவும் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை