அம்பாறை மாவட்டத்தில் திடீர் சூறைக்காற்று

இயல்பு பாதிப்பு; மரங்கள் முறிந்தன; வீடுகள் சேதம் ; மக்கள் அச்சம்

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்ைக பாதிப்படைந்தன.

அம்பாறை நகரப்பகுதி, அட்டாளைச்சேனை, நிந்தவூர், அக்கறைப்பற்று, காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் சம்மாந்துறை போன்ற பகுதிகளில் வீசிய சுழல் காற்று காரணமாக வீதிகளில் அதிகளவிலான தூசு மண்கள் வீசப்பட்டன.

இதனால்

பயணிகள் அசெகரியத்திற்கு உள்ளானதை காணக்கூடியதாக இருந்தது. சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வீதிப் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டன.

சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தன. திடீரென வீசிய காற்று மற்றும் மழையால் பொதுமக்கள் அச்சப்பட்டனர். இத் திடீர் அனர்தம் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு வினவிய போது,

திடீரென வீசிய பலத்த காற்றினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் பற்றி முழுமையான தகவல்கள் மாலை 5.00மணி எமக்கு கிடைக்கவில்லை.

பிரதேச செயலாளர்களோடு தொடர்பை ஏற்படுத்தி சேத விபரங்களை கோரியுள்ளோம். எனினும் சில பிரதேசங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன. கிடைத்த தகவல்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பியுள்ளோம்.

தற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை