கூடைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு மூன்று மாதத்திற்கு ரூ. 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

நேபாளத்தில் நடைபெறவுள்ள 13வது தெற்காசிய கூடைப்பந்து போட்டியில் பங்குபெறவுள்ள இலங்கை அணியின் வீர. வீராங்கணைகள் 60 பேருக்கு சத்துணவு வழங்கலுக்காக 4 மில்லியனுக்கும் (4,368,000.00) அதிகமான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிதியை 11.03.2019 ஆம் திகதி ஒதுக்கியுள்ளதாக விளையாட்டு துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிதி ஒதுக்கப்பட்டாலும் கடந்த மூன்று மாத காலத்தில் வீர வீராங்கணைகள் 60 பேரும் அதிகாரிகள் எட்டு பேரும் பயிற்சியில் ஈடுபடவில்லை. எவ்வாறாயினும் குறிப்பிட்ட நிதி செலவழித்த விதம் பற்றி கூடைப்பந்தாட்ட சங்கத்தால் அமைச்சுக்கு கட்டணப்பட்டியல்களை முன்வைக்க வேண்டும். அதைத் தவிர அதிகாரிகளுக்காக போசணை கொடுப்பனவாக 582,400.00 ரூபாவும் இரண்டு மைதானங்களை மூன்று மாதத்திற்கு 360,000.00 ரூபாவும் ஒதுக்கப்பட்டது.

அதன்படி அணியின் மொத்த போசணை கொடுப்பனவாகவும் மைதானங்களை ஒதுக்கவும் 5 மில்லியனுக்கும் (5,310,400.00) அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய ஆசிய கூடைப்பந்தாட்ட போட்டித் தொடருக்காக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஒவ்வொன்றுக்கும் 30 பேர் வீதம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு அங்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு 800 ரூபா வீதம் 91 நாட்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடைப்பந்தாட்ட போட்டியில் போட்டியிடுபவர்கள் 5 பேராகும். அணியில் 12 பேர் உள்ளடக்கப்படுவார்கள். 12 பேர் கொண்ட அணிக்கு பதிலாக மூன்று மாதங்களாக 30 பேர் கொண்ட அணிக்கு பணத்தை செலவு செய்தது விசேட அம்சமாகும். இலங்கையில் பாடசாலை கூடைப்பந்து மற்றும் விளையாட்டு கழகங்களின் வீரர்கள் மூலம் அவர்களின் திறமையை அறிந்து அவர்களை தெரிவு செய்தால் பணத்தையாவது மீதப் படுத்தியிருக்கலாம். இது தொடர்பாக விளையாட்டுதுறை அமைச்சின் அதிகாரிகளிடம் வினவிய போது நாம் நிதி வழங்கியுள்ளோம். அவை செலவுசெய்யப்பட்ட விதம் குறித்து அது தொடர்பான கட்டணப் பட்டியல்களை பெற்றுக்கொள்வோம். தெற்காசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டின்படியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.

Sat, 09/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை