30 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் இறக்குமதி செய்ய அரசு நடவடிக்ைக

இம்முறை பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான 30,000 மெற்றிக் தொன் உரம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார். மதவாச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை பெரும்போக நெற் செய்கைக்கு விவசாயிகளுக்கான மானிய உரம் வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உரம் சீனா, ரஷ்யா, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாத ஆரம்பத்தில் நெற்செய்கையை ஆரம்பிக்கும் வகையில் முன்கூட்டியே தேவையான உரங்களை பிரதேச கமநல சேவை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

ஹொரவபொத்தான விஷேட நிருபர்

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை