மாகாணங்களுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி

பரீத். ஏ. றகுமான்

மாகாணங்களுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் கொழும்பு அணி 147 ஓட்டங்களால் தம்புள்ளை அணி வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் காலி மற்றும் கண்டி அணிக்கு இடையிலான ஆட்டத்தில் கண்டி அணி 69 ஓட்டங்களால் காலி அணியை வீழ்த்தியது.

தம்புள்ளை சர்வதேச அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களை பெற்றது.அவ்வணி சார்பாக ஜே.டி சில்வா 49 ஓட்டங்களையும் மொஹம்மட் ஷமாஸ் 40 ஓட்டங்களையும் விக்கிரமசிங்க 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் 73 பந்துகளை எதிர் கொண்டு 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக இந்த ஓட்டத்தை பெற்றார்.நிமால் 28 ஓட்டங்களையும் சந்தருவன் 27 ஓட்டங்களுடனும் விஜேசிங்க 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ரொட்ரிக்கோ ,கமகே, திலகரத்ன தலா இரு விக்கெட்டையும் டானியல் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

284 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய தம்புள்ளை அணி 36.3 ஓவர்கள் முடிவில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது. அவ்வணி சார்பாக ரஸந்த 34 ஓட்டங்களும் திலகரத்ன 27 ஓட்டங்களும் ஜயகொடி 21 ஓட்டங்கள் பெற்றதே அதிகூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும். பந்து வீச்சில் கொழும்பு அணி சார்பாக பி என் டி சில்வா 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் ரத்நாயக்க இரண்டு விக்கெட்டையும விஜேசிங்க, ஜே.டி சில்வா ,லக்ஷான் சந்தருவன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.

கண்டி மற்றும் காலி அணிகள் மோதிய ஆட்டம் நேற்று கண்டி பல்லேகல சர்வதேச அரங்கில் இடம்பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி சகல விக்கெட்டுக்ளையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு துடுப்பாடிய காலி அணி 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

கண்டி அணி சார்பாக விக்கிரம சிங்க 97 ஓட்டங்களையும் தரிந்து 74 ஓட்டங்களையும் பெற்றமை விசேட அம்சமாகும்.

காலி அணி சார்பாக வலல்லாகே 44 ஓட்டங்களையும் ஏ.டி சில்வா 38 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை