சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தின கொடி விற்பனை

சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தையொட்டி நேற்று காத்தான்குடியில் கொடி விற்பனை மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தின கொடி விற்பனை மாதத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஜனாபா எம்.எஸ்.சில்மியா தலைமையில் இந் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது முதல் கொடி உதவி பிரதேச செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று தொடக்கம் ஜுன் மாதம் 30 திகதி வரை இக் கொடி மாதம் அனுஷ்டிக்கப்பட்டு கொடி விற்பனை இடம் பெறவுள்ளது.

இந்தக் கொடி விற்பனை மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அந்தந்த பிரதேசங்களில் தெரிவு செய்யப்படும் பல்வேறு சமூக அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஜனாபா எம்.எஸ்.சில்மியா தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Sat, 06/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை