பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி எம்மிடம் எதுவும் பேசவில்லை

பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால, ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் முற்றியுள்ளதாலும், அரசாங்கத்தை கொண்டுநடத்த முடியாத

நிலைமை ஏற்பட்டுள்ளதாலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்காக ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரம் பாராளுமன்றத் தேர்தலை முன்னதாக நடத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப் பொன்றை நடத்த ஜனாதிபதி ஆலோசித்துள் ளாரென செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து வினவிய போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐ.தே.கவிடம் இதுகுறித்து ஜனாதிபதி எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன், சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்புகளை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை. அத்தகைய எண்ணம் இருக்குமாயின் அதனை ஜனாதிபதியே வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை