MCC இன் தலைவராக குமார் சங்கக்கார

பிரித்தானியர் அல்லாத முதல் தலைவர் 
 
மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் (Marylebone Cricket Club- MCC) அடுத்த தலைவராக, இலங்கையின்  முன்னாள்  கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.   
 
எம்.சி.சி வரலாற்றில் பிரித்தானிய பிரஜை அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று (01) இடம்பெற்ற எம்.சி.சியின் வருடாந்த பொதுக் கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியானது. 
 
இதற்கமைய, இவரது முதலாவது தவணைக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகுவதாக எம்.சி.சியின் தற்போதையை தலைவர் அந்தோனி ரெபோர்ட் (Anthony Wreford)  அறிவித்துள்ளார். 
 
Thu, 05/02/2019 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை