சைபர் தாக்குதல் பாதுகாப்புக்கு சட்டமூலம் தயார்

முக்கியமான தகவல்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையிலான ‘சைபர் பாதுகாப்பு சட்டமூலம்’ ஒன்றை அரசாங்கம் புதிதாக வகுத்துள்ளது.  

இந்த சட்டமூலத்தின்படி புதிதாக சைபர் பாதுகாப்பு முகவரகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. நாட்டின் முக்கியமான தகவல் உட்கட்டமைப்பு தொடர்பான அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்குத் தேவையான கணனிகள் மற்றும் கணனி முகாமைகளை இந்த முகவரகம் இனம் கண்டு அவற்றை செயற்படுத்தும்.  

நாட்டு மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, அந்தரங்கம், பொருளாதார ஸ்திர நிலை, தேசிய பாதுகாப்பு, சர்வதேச பேண்தகு நிலை ஆகியவை தொடர்பாக இலத்திரனியல் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக கணிக்கப்படும்.   மேற்படி சைபர் பாதுகாப்பு முகவரகத்தின் செயற்பாடுகள் தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு கேந்திரத்தின் மூலம் கண்காணிக்கப்படும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர் அஜித் பி. பெரெரா நேற்று அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.  

உத்தேச சைபர் பாதுகாப்பு மசோதா தொடர்பான பொது மக்கள் ஆலோசனை மன்றம் எதிர்வரும் ஜூன் 6ஆந் திகதி இடம்பெறும் என்று அமைச்சர் பெரேரா தெரிவித்தார். உத்தேச மசோதாவை அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளமான www.mdiit.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது www.cert.lk என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கிக்கொள்ள முடியும்.    

Wed, 05/29/2019 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை