அயர்லாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்

துடுப்பாட்ட வீரர்களின் நிதான ஆட்டம்:

3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பங்களாதேஷ்.

மேற்கிந்திய தீவு , அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு அணியின் தலைவர் போர்ட்டர்பீல்ட்

நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில், அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 292 ஓட்டங்கள் பெற்றது.

பங்களாதேஷ் சார்பில் அபு ஜெயத் 5 விக்கெட்டும், மொகமது சல்புதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தமிம் இக்பால் 57 ஓட்டங்களும், லிட்டன் தாஸ் 76 ஓட்டங்களும், ஷகிப் அல்- ஹசன் 50 ஓட்டங்களும் எடுத்தனர்.

இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ்- மேற்கிந்திய தீவு அணிகள் இன்று மோதுகின்றன.

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை