மொசம்பிக் சூறாவளி: உயிரிழப்பு அதிகரிப்பு

சூறாவளி தாக்கிய வடக்கு மொசம்பிக்கில் உயிரிழப்பு 38 ஆக அதிகரித்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் உதவிப் பணியாளர்கள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தெற்கு ஆபிரிக்க நாடான மொசம்பிக்கை மணிக்கு 220 கி.மீற்றர் வேகத்தில் கடந்த வாரம் கென்னட் சூறாவளி தாக்கியது. பல கிராமங்களும் அழிவடைந்ததோடு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

இந்த சூறாவளி பலமிழந்தபோதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டிருப்பதோடு உதவி முயற்சிகளுக்கும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ஆறுகள் நிரம்பி இருக்கும் நிலையில் வெள்ள அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தாக்கிய இடாய் சூறாவளியை விடவும் இரட்டிப்பான மழைவீழ்ச்சியை இந்த சூறாவளி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை