வெளிச்சத்தின் சினிமா Andrei

ஒரு நூலினை வாசித்து அதில் கூறப்பட்டிருக்கும் விடயப்பரப்பினை புரிந்து கொள்வதினை விட அதனை உருமார்க்கமாக வெளிப்படுத்துகின்ற போது அவ்விடயப் பரப்பானது மக்களிடத்தில் இலகுவாக சென்றுவிடுவதினையும், மக்கள் மனதினை இலகுவில் கவர்ந்து விடக்கூடிய வகிபங்கினைக் கொண்டிருப்பதினையும் எம்மால் உணர முடிகிறது. இவ்வாறான காரணிகள்தான் அன்று தொட்டு இன்று வரை சினிமா எனும் பாரிய உலகத்தினுல் மக்கள் புகுந்து புதுமையான விடயங்களை ரசித்துக் கொண்டிருப்பதற்கு நியாயமான காரணமாகும்... 

இவ்வகையில் ரஷ்ய இயக்குனரான ஆந்த்ரே தார்கோவெஸ்கி 1969ல் இயக்கிய மிக அற்புதமான திரைப்படம்தான் Andrei வித்தியாசமான ஒளிப்பதிவுடன் வெளிவந்த இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.  

15ஆம் நூற்றாண்டின் காலப் பகுதியில் வாழ்ந்த ஆந்த்ரே ரூபலோவ் எனும் சிறப்பு மிக்க ஓவியரின் வாழ்வினை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் 20ம் நூற்றாண்டின் சோவியத் சினிமாவினை புதிய போக்கிற்கு கொண்டு சென்றதில் மிகவும் பங்காற்றியது. திரையில் விபரிக்கப்படும் கவிதைகள் என்று சொல்லப்பட்ட இத்திரைப்படம் கடவுள் பற்றியும், கடவுளுக்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், மெய்ஞானத்திற்கும், உலகியலின் யதார்த்தத்திற்கும் இடையில் காணப்படும் வரையறை பற்றியும் காட்சியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் வெளிப்படுத்தியது என்பதினை நாம் இத்திரைப்படத்தினை பார்க்கின்ற போது உணர்ந்து கொள்ள முடியும். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு ஒளிப்பது மிக முக்கியமான காரணியாகியது. பார்ப்பவர்களின் கண்களை கட்டிப்போடும் காட்சியமைப்புக்களை தத்ரூபமாக தனது கமராவினூடே வெளிப்படுத்தியிருக்கிறார் வோடிம் யூசுப். மனதினை மயக்கும் இசையும், கதாப்பாத்திரங்களின் வெளிப்படையான நடிப்பும் Andrei இன் சினிமா அழகியலாகும். எல்லோராலும் போற்றப்பட்ட இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக பாரிய வெற்றியினையும், கருத்தியல் ரீதியாகப் பாரிய விவாதத்தினையும் ஒரே நேரத்தில் சம்பாதித்த விநோதமான சினிமா.

ஒரு உலக சினிமாவிற்கான அடையாளம் என்பது அச்சினிமா கொண்டிருக்கும் கதை அமைப்பினதும், அதனை வெளிப்படுத்துகின்ற போது பிரஸ்தாபிக்கின்ற ஒளியமைப்பினதும், அதன் வழியே நகர்த்தப்படும் இசையும், நடிகர்களின் இணையற்ற நடிப்புமாகும் என்பதினை பல திரைப்படங்கள் கவனத்தில் கொள்வதில்லை.

இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்கின்ற திரைப்படங்கள் உலக சினிமாவாக அடையாளம் காணப்படுவதினை நாம் அவதானிக்கலாம். அவ்வகையில் Andrei ஒரு உலக சினிமாவாகும்...   

Sat, 05/04/2019 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை