சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்துள்ள Renown Sixes Tournament – 2019 போட்டித் தொடரில் சாய்ந்தமருதூரின் தாய்க்கழகமான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் நடைபெற்று முடிந்த 3 போட்டிகளிலிலும் தொடர் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது போட்டியில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தை 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் 5 ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியினை தளுவிக் கொண்டது.

இப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் அஸ்மி சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியில் நிந்தவுர் இம்ரான் விளையாட்டுக்கழகத்தை 4 விக்ெகட்டுக்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுமுக்கழகம் 3.1 ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுகளினால் வெற்றியீட்டிக் கொண்டது.

இப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் பயாஸ் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாவது போட்டியான கால் இறுதிப் போட்டியில் கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தை 9 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுமுக்கழகம் 5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டிக் கொண்டது.

இப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் நிப்ராஸ் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.

( மாளிகைக்காடு குறூப் நிருபர்)

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை