நெதர்லாந்து டிராம் ரயிலில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு

பள்ளிவாசல்கள், பாடசாலைகள் பூட்டு!

நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரில் சென்று கொண்டிருந்த டிராம் ரயிலில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், பயணிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான பயணிகளோடு நேற்றுக் காலை சென்று கொண்டிருந்த டிராம் ரயிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பின், இருவரும் காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தீவிரவாதத் தாக்குதலாகக் கருதும் ெபாலிசார், குற்றவாளிகளைக் கைதுசெய்யத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உட்ரெக்ட் நகரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. உட்ரெச்ட் நகர் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியேற வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஆம்ஸ்ட்ரடாம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை