'வரி செலுத்த வேண்டிய 10 இலட்சம் பேரில் 3 இலட்சம் பேரே முறையாகச் செலுத்துகின்றனர்'

நாட்டில் வரி செலுத்தவேண்டியவர்கள்  10 இலட்சத்திற்கும் மேலுள்ள போதும் மூன்று இலட்சம் பேரே அதில் கவனம் செலுத்துவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  

நாட்டில் 100க்கு 80வீத மக்கள் மறைமுக வரியை செலுத்துவதாகவும் 20%மானோரே நேரடி வரியைச் செலுத்துவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் அவ்வாறானோரும் வரி செலுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.  

வரிகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரலெழுப்புவோரில் பெரும்பாலானோர் வரி செலுத்துவதில்லை. பொருளாதாரம் பற்றி பேசுவோர் தாம் பெற்றுக்கொண்டுள்ள வங்கிக்கடனைக்கூட செலுத்தாத நிலையே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

வரி செலுத்த வேண்டியது ஒரு சமூகக் கடமையாகும். அனைவரும் வரி செலுத்துவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். நம் மக்களில் பெரும்பாலானோர் எல்லாவற்றையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவே எதிர்பார்க்கின்றனர்.  

அவ்வாறு சகலரும் நினைத்தால் சம்பளம் உட்பட அரசாங்கம் எங்கிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளுமென இவர்கள் யோசிப்பதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)   

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Sat, 03/09/2019 - 10:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை