கைதான இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை

கைதான இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை-Indian Airforce Pilot Will be Released Tomorrow- PAK PM Imran Khan

இம்ரான் கான் பராளுமன்றில் அறிவிப்பு

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாளை (01) விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவிய இந்திய விமானப் படையைக்கு சொந்தமான விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக, பாகிஸ்தான் விமானப்படை நேற்று (27) அறிவித்ததோடு, இதில் விமானி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

அபிநந்தன் வர்த்தமன் எனும் இந்திய விமானப்படையின் விங்க் கொமாண்டர் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பாகிஸ்தான் நேற்றைய தினம் (27) வெளியிட்டிருந்தது.
கைதான இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை-Indian Airforce Pilot Will be Released Tomorrow- PAK PM Imran Khan

அதில் பாகிஸ்தான் இராணுவம் அவரை சிறப்பாக நடத்துவது காண்பிக்கப்படுகின்றது. ஆயினும் குறித்த புகைப்படம், வீடியோ வெளியிட்டமை தொடர்பில் இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததோடு, அவரை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உரையாற்றிய, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாளை (01) விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்தார்.

கைதான இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை-Indian Airforce Pilot Will be Released Tomorrow- PAK PM Imran Khan

அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரை விடுதலை செய்யவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்ததோடு, இந்நடவடிக்கையால், தங்களை பலவீனமானவர்களாக கருத வேண்டாம். எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குறித்த அறிவிப்பு தொடர்பில் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானியர்களும் வரவேற்றதோடு, உலகளாவிய ரீதியில் இம்ரான் கானின் முடிவு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இம்ரான் கானின் குறித்த அறிவிப்பை அடுத்து, பாராளுமன்றத்திற்குள் எம்பிக்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காததோடு, எம்.பிக்கள் அனைவரும் மேசையில் தட்டி தங்கள் வரவேற்ப்பை தெரிவித்தனர்.

இரு நாட்டிற்கிடையில் காணப்படுவது தீவிரவாத பிரச்சினையை அன்றி, வேறு எதுவும் அல்ல எனத் தெரிவித்த இம்ரான் கான், இதனை சுமூகமாக தீர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Thu, 02/28/2019 - 18:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை