கிராமிய பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே நாட்டின் எதிர்காலம்

கிராமிய பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலே இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளமையால் இப்பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்தும் பொருட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

பல்லேகம பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியின் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு (08) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, கிராமிய பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய வேண்டும். இப்பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும். கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுப்பட்டு இப்பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

பல்லேகம பாடசாலை நீண்ட காலமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்கின்ற பாடசாலையாகும். இப்பாடசாலை ஒரு சிறு நிலப்பரப்பில் அமைந்துள்ளமையால் அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்களின் தேவைகளை பூர்த்திச் செய்வது கடினமாக உள்ளது.

இப்பிரதேச அமைச்சர் என்ற வகையில் இக்கிராமங்களிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்திச் செய்து பிள்ளைகளின் கல்வித் தரத்தை முன்னேற்ற வேண்டிய தேவை எனக்குள்ளது. பிரதே மக்களின் வாழ்கையை இலகுவாக்கும் பொருட்டு பாதைகள் பாலங்கள் வடிக்கால்கள் மற்றும் ஏனைய அடிப்படைவசதிகளை மேம்படுத்தி கிராமங்களை அபிவிருத்திச் செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு ஊழல் அற்ற சமூகத்தை கையளிப்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

Sat, 02/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை