598.1 கிலோ கடலட்டைகளுடன் இருவர் கைது

வடமேற்கு கடற்படைக் கட்டளைப் பிரிவுக்குட்பட்ட கல்பிட்டி கடற்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் திங்கட்கிழமை (18)  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இன்றி கடல் அட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.

கல்பிட்டி முகத்துவாரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவ்வாறு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்நடவடிக்கையின் போது உரப் பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த  598.1கிலோ எடையுடைய கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  இவற்றை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிபண்டர் ரக ஜீப்பையும் கைப்பற்றியதாகத் தெரிவித்த கடற்படையினர்,   கைது செய்யப்பட்ட இருவரும் கல்பிட்டி மற்றும் உக்குவளை  பிரதேசங்களைச் சேர்ந்த 42, 44ஆகிய வயதுளையுடையவர்கள்  என இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் டிபண்டர் ஜீப் வண்டியையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

புத்தளம் விஷேட நிருபர்

Wed, 02/20/2019 - 12:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை