இலங்கை -அவுஸ்திரேலிய 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கன்பராவில்

இலங்கை - -அவுஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று 1ஆம் திகதி கன்பரா விளையாட்டு அரங்கில் நடைபெறும். அவுஸ்திரேலியாவுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக பயணமாகியிருக்கும் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியினை தழுவியிருப்பதால், தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னதாக செயற்பட்ட அனுபவத்தினை கொண்டிருக்கும் அவிஷ்க குணவர்தன, இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள் என இரண்டு வகைப் போட்டிகளிலும் ஆடி 2,000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பொறுப்பினை பெற்றுக் கொண்டிருக்கும் அவிஷ்க குணவர்தன இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாக முன்னர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் பெற்றிருந்த இங்கிலாந்தின் ஜோன் லூயிஸ் குடும்ப விடயம் ஒன்றின் காரணமாக விடுமுறை எடுத்திருக்கின்றார்.

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தற்காலிக துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க குணவர்தன செயற்படவிருப்பதாக (30) தெரிவித்திருக்கின்றது.

அத்துடன் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்க அணியினை தேர்வு செய்யும் பொறுப்பில்இருந்து நீக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கை அணியில் லகிரு குமார, துஸ்மந்த சமீர ஆகியோர் காயம் காரணமாக நாடு திருப்பியுள்ளதால் அவருக்கு பதிலாகசாமிக்க கருணாரத்தன அணியில் இணைத்துக் கொள்ளப்படும் வாய்ப்புள்ளது.முதல் போட்டியில் ஆஸி அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

ஆனால் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் 3--0 என நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.ஆனால் ஆஸி அணி இந்திய அணியுடனான தோல்வியை இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று ஈடுகட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணியின் அணுகுமுறைகளை நெருக்கமாக அவதானித்து தயாராகியுள்ளதாக இலங்கையணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் ருமேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை