டொங்காவில் இணையதள சேவை முற்றாக துண்டிப்பு

பசிபிக் தீவு நாடான டொங்காவில் கடலுக்கு அடியில் உள்ள கேபிள் முறிந்ததால் அனைத்து கைபேசி மற்றும் இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

வெளியுலகத்துடனான தொடர்புகள் மற்றும் முக்கியமான சுற்றுலாத் துறைகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையி பிரச்சினையை தீர்ப்பதில் அதிகாரிகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

டொங்கா மற்றும் பீஜி நாடுகளுக்கும் இடையிலான கடலுக்கடியில் நீண்ட 827 கீலோமீற்றர் கேபிள் திருத்தப்படும்வரை இணைய போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே நாட்டின் தற்காலிக இணைப்புகளில் சமூகதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

முக்கிய தேவையுடை இணைதள இணைப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க இரண்டு வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை