அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

 2019ஆம் ஆண்டில் அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறுகிறது. சபாநாயகர் கரு ஜசூரிய தலைமையில் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவையில், உச்ச நீதிமன்றத்துக்கான நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. உச்சநீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர ஓய்வுபெற்றுச் செல்வதால் அவருடைய வெற்றிடத்துக்குப் புதியவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகள் வெற்றிடத்துக்கு அரசியலமைப்புப் பேரவை பரிந்துரைத்த பெயர்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு நியமனம் வழங்காத நிலையில், உச்சநீதிமன்ற நீதியரசருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்து 75 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளபோதும் ஜனாதிபதி இதுவரை நியமனத்தை வழங்காமை அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல. நீதித்துறையின் உயர் பதவிக்கு ஒருவரை நியமிக்காமல் இருப்பது கவலைக்குரிய நிலைமையாகும் என அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புப் பேரவை ஒருவரைப் பரிந்துரைத்தால் அதனை நியமிக்காமல் இருப்பதற்கு ஜனாதிபதிக்கு முடியாது.

அரசியலமைப்புப் பேரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் இருவரின் பெயரை பரிந்துரைத்து அனுப்பியிருந்த நிலையில் மேலும் இரு நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 01/07/2019 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை