பொதுமக்கள் கருத்தை கேட்க ஆட்டோவில் சென்ற பிரகாஷ்ராஜ்

பாராளுமன்ற தேர்தலில் போட்யிடும் பிரகாஷ்ராஜ் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக ஆட்டோவில் சென்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை எதிர்த்து டுவிட்டரில் அடிக்கடி கருத்து வெளியிட்டு வந்தார்.

தனது நெருங்கிய தோழியான பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதா அரசை மிக கடுமையாக சாடினார்.

பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல தனிக் கட்சி தொடங்குவாரா? என்றும் கேட்கப்பட்டது. அப்போது எல்லாம் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று கூறி வந்தார்.

ஆனால் திடீரென்று கடந்த 1-ந்திகதி பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாகவும் விரைவில் தொகுதி பற்றி அறிவிக்க இருப்பதாகவும் அறிவித்தார். அடுத்த சில தினங்களில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

அதில் பொதுமக்களின் பிரச்சினைகளை தெளிவாக குறிப்பிட்டு அதற்கு எண்ண தீர்வு காண வேண்டும் என்பதை தெரிவிக்க அவர், திட்டமிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பெங்களூர் மத்திய பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சட்டசபை தொகுதியிலும் உள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிய பிரகாஷ் ராஜ் முடிவு செய்தார்.

ஆட்டோவில் சென்று பொதுமக்களை சந்திக்க அவர் முடிவு செய்தார். அதன்படி 8 தொகுதிகளுக்கும் 8 ஆட்டோக்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிய திட்டமிட்டார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி பெங்களூர் எம்.ஜி.ரோடு மகாத்மா காந்தி சிலை அருகே நடைபெற்றது. அப்போது இதுபற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-

அரசியல்வாதிகளை விட நிபுணர்களை விட சாதாரண மக்களுக்குதான் நாட்டின் பிரச்சினைகள் பற்றி தெளிவாக தெரியும். எனவே அவர்களை நேரில் சந்திப்பதன் மூலம் பிரச்சினைகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

அதன் மூலம் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடியும்.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை