இந்த பாராளுமன்றில் புதிய அரசியலமைப்பை முன்வைக்க வேண்டாம்

* இனக்குரோதந்தான் வளரும்
* பொதுத்தேர்தலில் மக்கள் தீர்மானிக்கட்டும்

இந்த பாராளுமன்றத்தில் புதிய யாப்பு முன்வைக்க வேண்டாம். ஓர் இனத்தை பகைத்துக் கொண்டு மற்றொரு தரப்பு மாத்திரம் உரிமைகள் பெற முயல்வதால் குரோதம் தான் வளரும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் தரப்பினரை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் நிராகரித்தார்கள். பொதுத் தேர்தலுக்கு செல்வோம். அதன் போது நாம் எமது அரசியலமைப்பு யோசனையை முன்வைக்கிறோம். ஐ.தே.க தமது யோசனையை முன்வைக்கட்டும். மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சபை விவாதத்தில் உரையாற்றிய அவர் , நிபுணர் குழுவின் அறிக்கையையன்றி வழிநடத்தல் குழுவின் அறிக்கையே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். இன்று வழங்கிய அறிக்கை தொடர்பில் இன்றே விவாதிக்க முடியாது. அதனை ஆராய கால அவகாசம் தேவை. இந்த அறிக்கையில் என்ன உள்ளது என எமக்குத் தெரியாது. இந்த பாராளுமன்றம் முறையானதா என்பது தொடர்பில் சிக்கல் உள்ளது.துண்டு துண்டாக யாப்பு திருத்தப்பட்டதால் அரசியலமைப்பு நாசமாகியுள்ளது.முழுமையான யாப்பு தான் அவசியம்.

புதிய அரசியலமைப்பு கொண்டுவர முயலும் சகல கட்சிகளும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தன.ஓர் இனத்தை பகைத்துக் கொண்டு மற்றொரு தரப்பு மாத்திரம் உரிமைகள் பெற முயல்வதால் குரோதம் தான் வளரும். அரசியல் ரீதியில் குரோதம் ஏற்படுத்தாதீர்கள் என்று கோருகிறோம்.

மக்கள் ஆணையை மதித்து செயற்பட வேண்டும்.புதிய யாப்பு கொண்டுவரும் பாராளுமன்றம் முறையானதாக இருக்க வேண்டும். புதிய யாப்பு கொண்டுவரும் அரசு முறையானதாக இருக்க வேண்டும். அரசு அந்த நிலையில் உள்ளதா என சந்தேகம் உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள்.19 ஆவது திருத்தத்தை நீதிமன்றம் விமர்சித்துள்ளது. தேவையில்லாத சரத்துகள் இதில் உள்ளன. இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு தலைசாய்க்க பாராளுமன்றத்திற்கு நேரிட்டது. அவசரப்பட்டே திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.19 ஆவது திருத்தம் கொண்டுவந்த போது நான் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.

பொதுத் தேர்தலுக்கு ​செல்வோம். நாம் எமது அரசியலமைப்பு யோசனையை முன்வைக்கிறோம். ஐ.தே.க தமது யோசனையை முன்வைக்கட்டும் .மக்கள் எதனை அனுமதிக்கிறார்கள் என்று பார்ப்போம். அடுத்த பாராளுமன்றத்தில் புதிய யாப்பை முன்வைக்கலாம்.இந்த பாராளுமன்றத்திற்கு புதிய யாப்பு முன்வைக்க வேண்டாம். இது முறையற்ற பாராளுமன்றம்.

ஷம்ஸ் பாஹிம் மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 01/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை