ஆசியாவின் கறுப்பு சிங்கத்துக்கு நுவரெலியாவில் வரவேற்பு

ஆசியா கண்டத்தில் உடல்கட்டழகு (பொடிபில்டிங்) போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற ஆசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படும் இலங்கை வீரரான லூசன் புஸ்பராஜிக்கு ‘நுவரெலியா ரொக்ஸ்டா ஜிம்’உடல் கட்டழகுசங்கத்தின் தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் வரவேற்பு ஊர்வலம் இன்று (28) நுவரெலியா நகரில் நடத்தப்பட்டது.

இவ் ஊர்வலம் நுவரெலியா புனித சவேரியன் தேவாலயத்தில் மதபோதணையுடன் ஆரம்பித்து நுவரெலியா பழைய கடை வீதி, கண்டி வீதி, புதிய கடை வீதீ, வெளிமட வீதி, தர்மபால சந்தி, உடபுசலாவ வீதி வழியாக நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு சுமார் மூன்று மணித்தியாலயங்கள் லூசன் புஸ்பராஜ்,உடல்கட்டழகுபயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கினார்.

ஊர்வலம் நடைபெற்ற பொழுது பாதையில் இருபுறங்களிலும் பொது மக்கள் கூட்டமாக நின்றுபட்டாசு கொழுத்தி வாழ்த்து தெரிவித்ததையும் காணகூடியதாக இருந்தமைகுறிப்பிடதக்கது.

(நுவரெலியா தினகரன் நிருபர்– தியாகு சுப்ரமணியம்)

Mon, 01/28/2019 - 16:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை