அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 40 ஏக்கர் காணிகளை விடுவிக்க ஏற்பாடு

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 39.30 ஏக்கர் காணி எதிர்வரும் 18ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது.

டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் விடுவிக்கப்படும் என்ற அறிவித்தலுக்கமைய இந்தக் காணிகளும் டிசம்பர் மாதம் விடுவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நிர்வாக ரீதியான சில சிக்கல்கள் காரணமாக இக் காணிகள் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதன்படி அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி மற்றும் கல்முனை பிரதேசத்திலேயே 39.30 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

இதன்படி தீகவாபி, கல்முனை பகுதியில் 39.25 ஏக்கர் அரச காணியும் 0.5 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்படுகிறது.

இதேபோன்று ஜனவரி 2 ஆவது வாரம் விடுவிக்கப்படுவதாக முன்பு கூறப்பட்ட 1099 ஏக்கர் விவசாயப் பண்ணைகளடங்கிய அரச காணிகள் ஜனவரி மூன்றாவது வாரமளவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இராணுவம் நேற்று தெரிவித்தது.  

Sun, 01/13/2019 - 14:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை