ஆப்கானில் தங்க சுரங்கம் சரிந்து 30 பேர் உயிரிழப்பு

வட கிழக்கு ஆப்கானிஸ்தானில் தங்க சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சரிவில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பதக்ஷான் மாகாணத்தின் கோஹிஸ்தான் மாவட்டத்திலேயே இந்த சரிவு நிகழ்ந்துள்ளது. தங்கம் தேடி கிராம மக்கள் ஆற்றுப் படுகை ஒன்றில் 220 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டி இருப்பதோடு அந்த சுரங்கம் திடீரென்று இடிந்து சரிந்துள்ளது.

பெருமளவு கனிம வளம் கொண்ட ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான சுரங்கங்கள் பழையது மற்றும் பராமரிப்பற்ற நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்டவையாகும்.

சுரங்கம் சரியும் நிலையில் கிராம மக்கள் அகழ்வு இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த அனர்த்தத்தில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளனர். சுரங்கம் சரிந்ததை அடுத்து அங்கு விரைந்த உள்ளுர் மக்கள் 13 பணியாளர்களை மாத்திரம் காப்பாற்றியுள்ளனர். சிறுவர்கள் உட்பட பல டஜன் பேர் உயிரிழந்திருப்பதாக கோஹிஸ்தான் மாவட்ட தலைவர் ரொஸ்தாம் ராகி குறிப்பிட்டுள்ளார்.

அரச கட்டுப்பாடு இன்றி கிராம மக்கள் பல தசாப்தமாக இந்த வர்த்தகத்தில் ஈடுபடுவதாக மாகாண ஆளுநரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tue, 01/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை