அமைச்சுகளுக்கான பொறுப்புகள், விடயங்கள் வர்த்தமானியில்

Rizwan Segu Mohideen
அமைச்சுகளுக்கான பொறுப்புகள், விடயங்கள் வர்த்தமானியில்-Duties and Functions of Ministries-Extraordinary Gazette

- பொலிஸ், அரச அச்சு திணைக்களம் பாதுகாப்பு ஜனாதிபதியின் கீழ்
- ரூபவாஹினி, ஒலிபரப்பு கூ.தாபனம், லேக் ஹவுஸ் மங்கள சமரவீரவின் கீழ்

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுகளுக்கான பொறுப்புகள் மற்றும் அதன் கீழ் வருகின்ற விடயங்கள் உள்ளடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (28) திகதியிடப்பட்டுள்ள 2103/33 எனும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியன ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, தேசிய ஊடக மத்திய நிலையம், அரசாங்க அச்சக திணைக்களம், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை என்பனவும்  பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அமைச்சர் மங்கள் சமரவீர வகிக்கும் ஊடகம் மற்றும் நிதி அமைச்சின் கீழ் திறைசேரி, அரசு நிதி கொள்கைகள் திணைக்களம், தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை உள்ளிட்டவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசாங்க தகவல் திணைக்களம், இலங்கை பத்திரிகைகள் சபை, லேக் ஹவுஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி, லங்கா புவத் நிறுவனம், ‘செலசினே’ நிறுவனம், தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு என்பனவும் ஊடகம் மற்றும் நிதி அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமைச்சுகளின் பொறுப்புகள்

Sat, 12/29/2018 - 11:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை