பதவி, பட்டங்களை கோராது நியாயத்தின் பக்கம் நின்று தனித்துவம் காத்துள்ளோம்

பதவி, பட்டங்களைக் கோராது நியாயத்தின் பக்கம் நின்று போராடி சட்டவாக்கத்தின் தனித்துவத்தைக் காப்பாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத் திக் குழுவின் இணைத் தலைவருமான ஜீ.ஸ்ரீநேசன் தெரிவித்தார். 

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவமும் உத்தியோகஸ்தர் ஒன்று கூடலும் வைத்தி யசாலை பணிப்பாளர் டொக்டர் எஸ். சுகுணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து பேசியதாவது:

'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நியாயத்தின் பக்கம் நின்று சட்டவாக்க  சபையின் தனித்துவத்தை காப்பாற்றியுள்ளது. இதற்கு கைமாறாக என்ன செய்ய வேண்டுமென ஐக்கிய தேசிய  முன்னணியின் தலைவரும் முக்கியஸ்தர்களும் கேட்டனர்? த.தே. கூட்டமைப்பு  அவற்றை ஒரே வார்த்தையில் நிராகரித்தது'. தமிழ் மக்களின் தேவைக ள்  நிறைவேறினால் போதும் என்றோம்.

எமக்கு, பதவி, பட்டம், பந்தா, அதிகாரம் தேவையில்லை. வாக்களித்த எமது மக்களி ன் தேவைகள் நிறைவேற வேண்டும். இதற்கு அமைச்சுப் பதவிகள்தான்  தேவையென்பதில்லை. அவை இல்லாமலும்  மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினோம். எமது மக்களின் தேவைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

நோயற்ற வாழ்வே குறைவில்லாச் செல்வம் என ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள். அது பொய்யாகாது. அதனை நிறைவேற்றுவதற்காக இவ்வைத்தியசாலை அதிகம் பாடுபடுகின்றது.இதன் சேவையால் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலை உயர்ந்துநிற்கிறது. தேசிய ரீதியில் அது பல பரிசுகளைப் பெற்றிருக்கிறது. அதற்காக இதன் பணிப்பாளரையும், வைத்திய நிபுணர்களையும், வைத்தியசேவையோடு இணைந்த அனைத்து ஊழியர்களையும்  மனதாரப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

புளியந்தீவு தினகரன் நிருபர் 

 

Thu, 12/27/2018 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை