இஸ்ரேலில் முன்கூட்டிய தேர்தலுக்கு அறிவிப்பு

இஸ்ரேலில் வரும் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது.

தீவிர பழமை யூதர்களுக்கான கட்டாய இராணுவ சட்டம் தொடர்பில் ஆளும் கூட்டணிக்குள் தீர்வொன்றை எட்டத் தவறியதை அடுத்தே முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் தமது மதச்சார்பு, தேசியவாத கூட்டணி அடுத்த தேர்தலிலும் மையமாக திகழும் என்று பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் கூட்டணி அரசு கடந்த சில வாரங்களாக பிளவுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நெதன்யாகு தொடர்ந்து பதவியில் நீடித்தால் இஸ்ரேலின் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த தலைவராக பதிவாவார். எனினும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை எடுப்பது குறித்து சட்டமா அதிபர் தீர்மானிக்கவிருக்கும் நிலையில் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியாகி உள்ளது.

மோசடி மற்றும் லஞ்சம் பெற்ற சந்தேகத்தில் மூன்று வழக்குகளில் நெதன்யாகு மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

Wed, 12/26/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை