செவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளத்தாக்கு

செவ்வாய் கிரகத்தின் வட துருவத்திற்கு அருகில் உள்ள கொரோலேவ் பள்ளத்தாக்கில் பனி உறைந்திருக்கும் படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வுக்கலம் வெளியிட்டுள்ளது.

82 கிலோமீற்றர் அகலமுள்ள இந்தப் பள்ளத்தாக்கில் 1.8 கிலோமீற்றர் அடர்த்தி கொண்டதாக பனி காணப்படுகிறது. உலகில் முதல் செயற்கைத் துணைக்கோளை விண்வெளியில் பாய்ச்சிய ரஷ்ய உந்துகணை பொறியியலாளர் செர்கெய் கொரோலேவின் பெயரே இந்தப் பள்ளத்தாக்கிற்கு சூட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆய்வுக்கலத்தின் ஸ்டீரியோ கெமராவின் மூலமே இந்த பனி உறைந்த படம் பிடிக்கப்பட்டுள்ளது. கொரோலோவ் பள்ளத்தாக்கின் ஐந்து வெவ்வேறு புகைப்படங்களை இணைத்து ஒற்றைப்படமாக இந்தப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15ஆவது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Mon, 12/24/2018 - 10:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை