1,67,907 மாணவர் பல்கலைக்கு தகுதி

119 பெறுபேறுகள் இடைநிறுத்தம்

மீளாய்வுக்கான இறுதி திகதி ஜனவரி 15

2018 க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ள 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேரில் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் இரவு (29) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களின் விபரங்களை பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித அறிவித்துள்ளார்.

இதேவேளை 119 மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது. அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக பெறுபேற்று சான்றிதழ்களை 2019 ஜனவரி 01ஆம் திகதி பெற்றுக் கொள்ள முடியும்.

க.பொ.த. (உ/த) பரீட்சை மீளாய்வுக்காக விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 2019 ஜனவரி 15ஆம் திகதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான மீளாய்வு விண்ணப்பப்படிவங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களம் பத்திரிகைகள் ஊடாக வெளியிடும் அறிவித்தலின்படி விண்ணப்பப்படிவங்களை தயாரித்து அனுப்ப முடியும். விண்ணப்பப்படிவங்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கான க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் பெறுபேறுகள் தபாலிடப்படும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது

Mon, 12/31/2018 - 08:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை