Gas சிலிண்டர் விநியோகம் பத்தாயிரத்தால் அதிகரிப்பு

புதிய எரிவாயு முனையம் விரைவில் ஆரம்பம்

எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால், தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்படி, தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க சப்புகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Wed, 05/31/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை