சீனாவுக்கும் எரித்திரியாவுக்கும் இடையில் வலுவான நட்புறவு

பொதுவானதும் நீண்ட கால நலன்களை அடிப்படையாகக் கொண்டதுமான வலுவான நட்புறவை சீனாவும் எரித்திரியாவும் பேணி வருவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள எரித்திரிய ஜனாதிபதி ஐசயாஸ் அப்வெர்க்கிக்கு தியனன்மன் சதுக்கத்தில் அணிவகுப்பு மரியாதை அளித்து பீஜிங் பீப்பல் கிரேட் ஹோல் மண்டபத்தில் விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது. இதன்போது ஷி ஜின்பின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு இரண்டு தலைவர்களும் இரு பக்க நட்புறவு, பொருளாதாரம், முதலீடு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டுள்ளனர் என்று சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tue, 05/30/2023 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை