அதி திறன் மோட்டார் சைக்கிள்களை சட்டபூர்வமாக பதிவு செய்யும் முறையை தயாரிக்க பணிப்பு

அமைச்சர் பந்துல அதிகாரிகளுக்கு ஆலோசனை

இலங்கையின் சட்டரீதியாக பதிவு செய்யப்படாத அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டபூர்வமாக பதிவு செய்வதற்கு முறையான அமைப்பு ஒன்றை விரைவாக தயாரிக்குமாறு போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டுக்குள் உதிரிப் பாகங்கள் கொண்டுவரப்பட்டு இணைக்கப்படும் அதித்திறன் கொண்ட ( என்ஜின் திறன் 450 CC மேல்) மோட்டார் சைக்கிள்களுக்காக சரியான பதிவை மேற்கொண்டு பயன்படுத்தக் கூடிய வகையில் முறை ஒன்றை தயாரித்துத் தருமாறு ஸ்பின் ரைடர்ஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் விளையாட்டு கழகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய குறிப்பிட்ட தரப்பினருடன் கலந்துரையாடலொன்று போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சின் கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்ட சுமார் அதி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் 3000 முதல் 4000 வரை தற்போது நாடு முழுவதும் பலரிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்கள் மூலம் அரசாங்கத்துக்குரிய வரி, பதிவு கட்டணம் என்பன செலுத்தப்படாமல் உள்ளன என கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

இதற்கு தீர்வு காணும் முகமாக மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

அதற்கமைய அது தொடர்பாக காணப்படும் சட்ட நிலைமையை ஆராய்ந்த பின்னர் இதற்கு முன்னர் வரவு செலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள எஞ்சின் கொள்ளளவு 1000 வரையான மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு செயற்பட வேண்டியது எவ்வாறு என்பது தொடர்பாக தேவையான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரம் உட்பட்டதாக எதிர்காலத்துக்கு எடுத்துக்காட்டாக அமையாத விதத்தில் இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு தேவையான சட்ட சூழலை தயாரிக்கவும் அரசாங்கத்தால் குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வாறு காணப்படும் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்காக அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரைவை பத்திரத்தை தயாரிக்கவும், அந்த பதிவை விளையாட்டு நடவடிகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இங்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

நாட்டுக்கு கிடைக்காத வரி வருமானத்தை குறிப்பிட்ட கால எல்லையில் மீண்டும் அறவிடுவதற்கும் மற்றும் மீண்டும் சட்டவிரோதமாக இந்நாட்டிற்குள் மோட்டார் சைக்கிள்களை கொண்டு வருவதை ஊக்குவிக்காதிருப்பதற்கும் சரியான போக்குவரத்துச் சட்ட விதிகளை உருவாக்குவதன் ஊடாக மேற்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன, போக்குவரத்து மற்றும் பெருந் தெருக்கள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Tue, 03/14/2023 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை