ஊவா, அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை பகுதிகளில் மழை

- மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா பகுதிகளில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (15) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Wed, 03/15/2023 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை