சட்டவிரோதமாக நுழைவோருக்கு அவுஸ்திரேலியாவுக்குள் இடமில்லை

இலங்கைக்கான ஆஸி. தூதுவர் போல் ஸ்டீவன்ஸ் எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எண்ணம் கொண்ட இலங்கையருக்கு ஒருபோதும் நுழைய முடியாதென, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் எச்சரித்துள்ளார்.

எனவே, ஆட்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்தனர்.

இவ்வாறு சென்ற பலர், இலங்கை கடற்படையினராலும் அவுஸ்திரேலிய படையினராலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான ஆட்கடத்தல் சிக்கல் புதிய ஒன்றல்ல எனவும் பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினை எனவும், அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கையிலிருந்து எந்தப் படகுகளும் அவுஸ்திரேலியாவை வந்தடையவில்லை. எந்த சட்டவிரோதக் குடியேறியும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை வந்தடையவில்லை, எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருபவர்களுக்கு ஐ.நா. அகதிகள் முறைமை வழியாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் மனிதாபிமான குடியமர்த்தல் திட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஸ்டீவன்ஸ் தெரிவித்தார்.

Sat, 03/18/2023 - 13:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை