மடகஸ்காரில் கோர விபத்து; சீனன்கோட்டை வர்த்தகர் பலி

மேலும் 02 இலங்கையர் படுகாயம்

மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் (14) ஸ்தலத்திலே பலியானார். அத்துடன் இதில், மேலும்  இரு வர்த்தகர்கள் காயமடைந்தனர். இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் 5.30 மணியளவில் இக்கார் விபத்து இடம் பெற்றது.இரு பிள்ளைகளின் தந்தையான முஹம்மத் ரவூப் முஹம்மத் ரிலா என்ற இரத்தினக்கல் வர்த்தகரே இவ்விபத்தில் உயிரிழந்தார். சீனன் கோட்டையைச் சேர்ந்த முஹம்மத் இப்ராஹிம் முஹம்மத் ஹுஸைன், முஹம்மத் இக்பால் முஹம்மத் இஷ்ரத் ஆகிய இருவருமே காயமுற்று மடகஸ்கார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைக்காக வாடகை காரில் பயணம் செய்த சமயம், இன்னொரு காருடன் மோதி இவ்விபத்து நேர்ந்ள்ளது. விபத்தில் மரணமான முஹம்மத் ரிலாவின் ஜனாஸா அன்றைய தினம் நள்ளிரவு மடகஸ்காரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விபத்தில் பலியான வர்த்தகர் கடந்த நான்கு வருட காலமாக மடகஸ்காரில் தங்கியிருந்து இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேருவளை விசேட நிருபர்

Thu, 03/16/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை