பிரபல சிங்கள பாடகரும் இசையமைப்பாளருமான சனத் நந்தசிறி காலமானார்

Rizwan Segu Mohideen

சிரேஷ்ட சிங்கள பாடகரும் இசையமைப்பாளருமான பேராசிரியர் சனத் நந்தசிறி (81) காலமானார்.

சங்கீத் நிபுன் என அழைக்கப்படும், பேராசிரியர் ஹேரத் முடியன்சேலாகே சனத் நந்தசிறி 1942 பெப்ரவரி 15 ஆம் திகதி பிறந்தார்.

குடும்பத்தில் 3ஆவதாக பிறந்த இவர், இலங்கையின் பாடகர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் என பல அவதாரங்களைக் கொண்டார்.

அவர், இலங்கையின் அழகியற் கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்தார் .

இலங்கையின் இசைத் துறையில் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவரான நந்தசிறி ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தனது இசையமைப்பிற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான முதலாவது தொலைக்காட்சித் தொடரான ​​'சந்தமாலிகே க(த்)தாவ' எனும் தொடர் நாடகத்திற்கு இசையமைத்த பெருமை இவரையே சாரும்.

Tue, 03/28/2023 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை