பூகம்பத்தில் தப்பியோர் கடும் வெள்ளத்தில் பலி

தென் கிழக்கு துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட இரு நகரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 14 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.

இதில் பூகம்பத்தில் இருந்து உயிர் தப்பி கூடாரங்கள் மற்றும் கொள்கலன்களில் வசித்துவந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். சன்லூபர் நகரில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதோடு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதியமானில் கொள்கலன் ஒன்றில் தங்கி இருந்த இரு குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மேலும் பலர் காணாமல்போயிருக்கும் நிலையில் நகரில் இருக்கும் கூடாரங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

துருக்கியில் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை பூகம்பத்தில் 48,000 பேர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர்.

Fri, 03/17/2023 - 10:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை