இம்ரான் கான் ஆதரவாளர் பொலிஸ் இடையே மோதல் கைது முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் பொலிஸாரின் முயற்சியை முறியடித்து அவரது ஆதாரவாளர்கள் இரண்டாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது ஆதரவாளர்களின் பாதுகாப்புடன் இம்ரான் கான் லாஹுரில் இருக்கும் தனது வீட்டில் உள்ளார்.

நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் மூலம் கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான் முன்கூட்டி தேர்தலை நடத்த தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், வழக்கு விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமன் பூங்காவில் இருக்கும் இம்ரான் கானின் வீட்டுக்கு வெளியில் அவரது தஹ்ரீகே இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸார் மற்றும் துணைப் படையினருக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முழுவது மோதல் நீடித்தது.

இதன்போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதோடு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 35க்கும் அதிகமான பொலிஸார் காயமடைந்திருப்பதாக லாஹுர் பொலிஸ் பேச்சாளர் செயித் முபாஷிர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சூரியோதயத்திற்கு சற்று முன்னர் கான் வெளியிட்ட வீடியோ ஒன்றில், நிர்வாகத்தினர் சட்டத்துக்கு அப்பால் தம்மை கைது செய்ய முயல்வதாக குற்றம்சாட்டினார்.

பதவியில் இருந்தபோது கிடைத்த பரிசுகளை விற்றதாகவே இம்ரான் கான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 03/16/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை