அமெரிக்க பாடசாலை சூட்டில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட அறுவர் பலி

அமெரிக்காவின் டெனஸ்ஸி மாநிலத்தில் உள்ள நஷ்வில்லே நகரின் பாலர் பாடசாலை ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் மற்றும் மூன்று பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை (27) காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஒன்பது வயதுகளைக் கொண்ட மூன்று சிறுவர்களே துப்பாக்கிக் காயங்களுடன் கொல்லப்பட்டிருப்பதுடன் பெரியவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்று நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் அந்த நகரைச் சேர்ந்த 28 வயதான அட்ரி ஹேல், இருந்த கட்டடத்திற்குள் நுழைந்த பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக நஷ்வில்லே பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவரான ஹேல் ஒரு திருநங்கை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதோடு இந்த ஆண்டில் இதுவரையில் குறைந்தது 128 பாரிய துப்பாக்கிச் சூடுகள் நடந்திருப்பதாக அதனை கண்காணிக்கும் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Wed, 03/29/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை