பிரெட்டி சூறாவளி: மாலாவியில் உயிரிழப்பு 326 ஆக அதிகரிப்பு

மாலாவி நாட்டில் பிரெட்டி சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி தொடக்கம் இந்த புயலால் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

இரண்டாவது முறையாக இந்த சூறாவளி தெற்கு ஆபிரிக்க பகுதியை தாக்கியதை அடுத்து ஏற்பட்ட, கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கொல்லப்பட்ட சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

பிரெட்டி சூறாவளி ஆரம்பத்தில் பெப்ரவரி பிற்பகுதியில் தெற்கு ஆபிரிக்க பிராந்தியத்தை தாக்கி பின்னர் மடகஸ்கார் மற்றும் மொசம்பிக் நாடுகளையும் சூறையாடியது. பின்னர் இந்திய பெருங்கடலை நோக்கி நகர்ந்த இந்த சூறாவளி மீண்டும் வலுப்பெற்று இரண்டாவது முறையாக கடந்த வாரம் தெற்கு ஆபிரிக்க பிராந்தியத்தை மீண்டும் தாக்கியது.

இதில் மொசம்பிக் நாட்டில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மடகஸ்காரில் மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர்.

Sat, 03/18/2023 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை