கலா பொல நிகழ்விற்கு 30 ஆண்டுகள், இலங்கையின் திறந்தவெளி கலைக் கண்காட்சிக்கு மாபெரும் வெற்றி

இலங்கையின் மாபெரும் திறந்தவெளி கலைக் கண்காட்சியான கலா பொலவின் 30ஆவது வருட நிகழ்வு அண்மையில் கொழும்பு 07 ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் கோலாகலமாக இடம்பெற்றது.

ஜோர்ஜ் கீத் அறக்கட்டளை (George Keyt Foundation) மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் (John Keells Group) நீண்ட கால ஒத்துழைப்புடன் இடம்பெற்று வரும் கலா பொல கண்காட்சி, கலைஞர்கள் மற்றும் சிற்பிகளுக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்களது கலைப் பொருட்களை, கொள்வனவு செய்வோர் மற்றும் தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கலைச் சமூகத்துடன் அவர்களை இணைப்பதற்குமாக இடம்பெறும் இலங்கையின் மிகப் பெரிய மற்றும் நீண்ட காலமாக இயங்கிவரும் தளமாகும். கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் முதல் கலைக் கண்காட்சியாக இடம்பெற்ற இந்த நிகழ்வு, வளர்ந்த கலைஞர்கள் 312 பேர் மற்றும் சிறுவர் கலைஞர்கள் 358 உள்ளிட்டோரின் பங்கேற்புடன் சுமார் 33,000 பார்வையாளர்களை ஈர்க்கச் செய்தது.


இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், கலைஞர் ஒருவருடன் உரையாடுகையில்...

கலா பொல நிகழ்வில் முதன்முறையாக பங்கேற்கும் கலைஞரான கயானி பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில்: “இந்நிகழ்வானது, ஏனைய கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இணைவதற்கும் அவர்களை தொடர்பு கொள்ளவும் எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. தற்போது நான் பார்வையாளர்களின் விருப்பங்களை அறிந்துள்ளதோடு, மேலும் சிறப்பாக அதற்காக தயார் செய்யவும் என்னால் முடியும். நான் 36 ஓவியங்களை கொண்டு வந்ததோடு, அதில் 22 ஓவியங்களை விற்பனை செய்துள்ளேன். இந்த வாய்ப்பிற்காக ஜோர்ஜ் கீத் அறக்கட்டளைக்கும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளைக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்!” என்றார்.

இந்த உத்தியோகபூர்வ விழாவில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, அவருடன் ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையின் தலைவர் மாலக தல்வத்த உள்ளிட்ட அறக்கட்டளையின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

2023 கலா பொல நிகழ்வின் சிறந்த ஐந்து கலைஞர்களாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்ட கலைஞர்கள்...

பார்வையாளர்களிடம் உரையாற்றிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், "எந்தவொரு சமூகத்திலும் கலை மற்றும் கலாசாரம் ஒரு முக்கிய அங்கமாகும் என்பதோடு, அவை சமூக வளர்ச்சி மற்றும் உள்ளீர்ப்பிற்கு உதவுவதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. தற்போது இலங்கைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கும் முக்கியமான துறைகளாகவும் அவை உள்ளன.

John Keells Holdings PLC தலைவரான கிரிஷான் பாலேந்திர இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், “நாடு முழுவதிலும் உள்ள கலைஞர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தவும் அவர்களது படைப்புகளை ஊக்குவிக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவுமான ஒரு முதன்மையான தளமாக கலா பொல பல வருடங்களாக பரிணமித்துள்ளது. ‘நாளைக்கான தேசத்தை மேம்படுத்துதல்’ எனும் தூரநோக்கின் கீழ் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆறு பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) தூண்களில் கலை மற்றும் கலாசாரமும் ஒன்றாகும். கலா பொலவின் அனுசரணையாளர் மற்றும் ஒழுங்கமைப்பாளர் எனும் வகையில் ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையுடன் இணைந்து செயற்படுவதில் நாம் மிகவும் பெருமையடைகிறோம்.” என்றார்.


நிகழ்வை பார்வையிடும் பார்வையாளர்கள்

கலா பொலவுக்கு வருகை தந்த பார்வையாளரான தனுஜ ஜயவர்தன கருத்து வெளியிடுகையில், “நாடு முழுவதிலும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைப்பது இலகுவான காரியமல்ல. இந்த நிகழ்விற்கு வருகை தரும் மக்கள் ஒரே இடத்தில் பல்வேறு வகையான கலை மற்றும் பாணிகளை கண்டு மகிழும் வாய்ப்பைப் பெறுகின்றனர். நான் ஒவ்வொரு வருடமும் கலா பொலவுக்கு வரும் ஒருவர் என்பதோடு, இந்த வருடமும் கலந்துகொள்ள நேரத்தை ஒதுக்கிக் கொண்டேன்.” என்றார்.

கலா பொலவிற்கு 30 வருடங்கள் என்பது, கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு மகத்தான வெற்றியை காட்டுகிறது. இதன் மூலம் கோரிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளை தவிர்த்து ரூ. 35 மில்லியன் பெறுமதியான விற்பனைகள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட சிறுவர் கலை பகுதியில் 110 சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் கோரா ஆபிரகாம் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ், வளர்ந்து வரரும் கலைஞர்களுக்கு வண்ணப்பூச்சுகள் மற்றும் களிமண் படைப்புகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு ஜோன் கீல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 150 தன்னார்வலர்கள் பங்களித்திருந்தனர். கலா பொல நிகழ்வானது, காட்சிக் கலையில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், நடனம், பறை இசைத்தல், நாட்டுப்புறப் பாடல் உள்ளிட்ட இலங்கையின் நிகழ்வுக் கலைகளை அழகிய வடிவில் திருவிழா போன்ற சூழலில் காட்சிப்படுத்தியது.

30ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கலா பொல 2023 நிகழ்வில், கலை நிபுணர்கள் குழுவால் தெரிவு செய்யப்பட்ட ‘சிறந்த ஐந்து கலைஞர்களுக்கான விருது’ நிகழ்வும் இடம்பெற்றது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், தர வரிசையின்றி வெற்றியாளர்களாக தெரிவான ஆலோக பண்டார, சமிந்த பண்டார, கசுன் மனோஜ், ருவன் மஹிந்தபால, சந்தீப விதானகே ஆகியோருக்கு வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கலா பொல திறந்த வீதி கண்காட்சியினை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் வழங்கப்படும் https://www.srilankanartgallery.com எனும் டிஜிட்டல் தளத்தில் பார்வையிடலாம். இது வருடம் முழுவதும் இலங்கையின் காட்சி கலைஞர்களின் திறமைகளை காட்சிப்படுத்துவதற்காக ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ளது.

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்தும் ஆறு துறைகளில் கலை மற்றும் கலாசாரமும் ஒன்றாகும். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH), இலங்கையின் மிகப்பெரும் பட்டியலில் உள்ள பல்வகை குழும நிறுவனம் என்பதோடு, கொழும்பு பங்குச் சந்தையில் 7 பல்வேறு தொழிற்துறைகளில் உள்ள 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை அது இயக்குகிறது. 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், LMD சஞ்சிகையால் கடந்த 17 வருடங்களாக இலங்கையின் 'மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக' தரப்படுத்தப்பட்டுள்ளது. Transparency International Sri Lanka வினால் வழங்கப்படும் 'பெருநிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை' பிரிவில் JKH தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) முழு உறுப்பினராகவும், UN Global Compact இன் பங்கேற்பாளராகவும் உள்ள JKH நிறுவனம், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், சமூக தொழில்முனைவோர் முயற்சியான இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை கணிசமாகக் குறைப்பதை ஊக்குவிக்கும் 'Plasticcycle’ (பிளாஸ்டிக் மீள்சுழற்சி) திட்டம் மூலமாகவும் ‘நாளைக்கான தேசத்தை மேம்படுத்துதல்’ எனும் அதன் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) தூரநோக்கை செயற்படுத்தி வருகிறது.

Mon, 03/27/2023 - 15:02


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை