ஜப்பானும் தென் கொரியாவும் 12 வருடங்களின் பின் மாநாடு

உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் வேகமான இராஜதந்திர நகர்வுகளின் பின்புலத்தில் ஜப்பானும் தென் கொரியாவும் 12 வருடங்களின் பின்னர் முதன் முறையாக உச்சி மாநாடொன்றை நடத்தியுள்ளன.

இம்மாநாட்டின் போது இராஜாந்திர நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தங்களது உறவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இம்மாநாட்டைத் தொடர்ந்து தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்–யோல் கூறுகையில், “கொரியா–ஜப்பான் உறவுகளை கவனிக்காமல் நேரத்தை வீணடிக்க முடியாது” என்றுள்ளார்.

மேலும், உயர் தொழில்நுட்ப பொருட்கள் தொடர்பில் சுமார் நான்கு ஆண்டுகாலம் நீடித்த சர்ச்சையை கைவிட ஜப்பானிய பிரதமரும் தென் கொரிய ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டுள்ளதோடு ஆழமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படவும் உறுதியளித்துள்ளனர். ஜப்பானும் தென்கொரியாவும் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்மாநாட்டை நடாத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 03/25/2023 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை