நடனமாடிய ஜோடிக்கு பத்து ஆண்டுகள் சிறை

வீதியில் நடனமாடிய வீடியோ ஒன்றை பதிவேற்றிய இருபது வயதுகளில் இருக்கும் ஈரானிய ஜோடிக்கு மொத்தம் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீது சீர்கேட்டை ஊக்குவித்தது, விபசாரத்தில் ஈடுபட்டது மற்றும் பரப்புரையில் ஈடுபட்டதாகக் குற்றங்காணப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்கள் டெஹ்ரானின் அசாதி சதுக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றையே சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானதை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வலுத்த நிலையில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நாட்டில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் இவர்கள் நடனமாடியது ஆர்ப்பட்டத்துடன் தொடர்புபட்டதல்ல என கூறப்படுகிறது.

இந்த இருவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் இரண்டு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Thu, 02/02/2023 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை