பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு: எண்மர் பலி

தென்னாபிரிக்காவின் குபர்ஹா நகரில் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் விருந்தினர்கள் நடனமாடிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உலகில் அதிக கொலை சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் ஒன்றான தென்னாபிரிக்காவில் குற்ற கும்பல்களின் வன்முறை மற்றும் மதுபோதை தொடர்பிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

Tue, 01/31/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை